அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்!

மார்ச் 20-ம் தேதி இத்திரைப்படம் தெலுங்கில் சக்தி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியிடவில்லை.

அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்!
சிவகார்த்திகேயன்
  • Share this:
அமேசான் பிரைம் தளத்தில் இருந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஹீரோ. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு. இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என்றும் கூறினார்.

இதையடுத்து கதைதிருட்டு தொடர்பாக உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வேறு மொழிகளில் வெளியிடவும், டிஜிட்டல், சாட்டிலைட், மொழிமாற்றம் செய்து வெளியிடவும் தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனாலும் மார்ச் 20-ம் தேதி இத்திரைப்படம் தெலுங்கில் சக்தி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியிடவில்லை.


நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பதற்கு முன்னதாகவே ஹீரோ திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டது. டிஜிட்டல் தளத்தில் வெளியிட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு அமேசான் பிரைம் தளத்துக்கு அனுப்பவே தற்போது படத்தை நீக்கியுள்ளது.








First published: April 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading