சிவகார்த்திகேயனின் ஹீரோ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் டிசம்பர் மாதம் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று பட்ககுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

news18
Updated: July 27, 2019, 6:19 PM IST
சிவகார்த்திகேயனின் ஹீரோ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன்
news18
Updated: July 27, 2019, 6:19 PM IST
நடிகர் சிவகார்த்திகேயனின் "ஹீரோ" பட ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் "ஹீரோ" படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் டிசம்பர் மாதம் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று பட்ககுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also see:

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...