நெல் ஜெயராமன் குடும்பத்துக்கு சிவகார்த்திகேயன் செய்த மகத்தான உதவி!

ஜெயராமனின் உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

Web Desk | news18
Updated: December 6, 2018, 10:55 AM IST
நெல் ஜெயராமன் குடும்பத்துக்கு சிவகார்த்திகேயன் செய்த மகத்தான உதவி!
மருத்துவமனையில் நெல் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன் (கோப்புப்படம்)
Web Desk | news18
Updated: December 6, 2018, 10:55 AM IST
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மகனின் கல்விச்செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ‘நெல்’ ஜெயராமான் இன்று அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஜெயராமனின் உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இந்நிலையில், ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். மேலும், அவரது மகனின் கல்விச் செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார்.

Also See..

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...