ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரின்ஸ் திரைப்படத்தின் நஷ்டத்திற்கு பொறுப்பேற்ற சிவகார்த்திகேயன்!

பிரின்ஸ் திரைப்படத்தின் நஷ்டத்திற்கு பொறுப்பேற்ற சிவகார்த்திகேயன்!

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,  உக்ரைன் நடிகை மரிய ரைபோஷப்கா, பிரேம்ஜி அமரன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் பிரின்ஸ்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரின்ஸ் திரைப்படத்துக்கான நஷ்ட ஈடாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து நஷ்டத்தில் 50 சதவிகிதத் தொகையை விநியோகஸ்தருக்கு திருப்பி அளித்துள்ளனர்.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,  உக்ரைன் நடிகை மரிய ரைபோஷப்கா, பிரேம்ஜி அமரன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் பிரின்ஸ். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி இப்படம் வெளியானது.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வந்ததையடுத்து இந்த படம் வசூலில் அடி வாங்கியது.

சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல், காமெடி வகையிலேயே இந்தப் படத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அது ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படத்துக்கான நஷ்ட ஈடாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து நஷ்டத்தில் 50 சதவிகிதத் தொகையை விநியோகஸ்தருக்கு திருப்பி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் இப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிட்டிருந்த நிலையில், விநியோகஸ்தருக்கு  12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனும்  பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து நஷ்டத்தில் 50 சதவிகிதத் தொகையான 6 கோடி ரூபாயை விநியோகஸ்தருக்கு  திருப்பியளித்துள்ளனர்.

Also read... நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sivakarthikeyan