'ஹீரோ' ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயைப் பின்பற்றும் சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

news18
Updated: March 27, 2019, 7:01 PM IST
'ஹீரோ' ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயைப் பின்பற்றும் சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ
சிவகார்த்திகேயன்
news18
Updated: March 27, 2019, 7:01 PM IST
படப்பிடிப்பு தளத்தில் விஜயைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருவதைப் போல் சிவகார்த்திகேயனுக்கும் நடந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மேலும் படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூனும், நடிகை இவானா முக்கிய கதாபாத்திரத்திலிலும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில் சிவகார்த்திகேயனைக் காண குவிந்த ரசிகர்கள் பலரும் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சிவகார்த்திகேயனின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.முன்னதாக நடிகர் விஜய் ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து வந்தார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது சந்தித்து வருகிறார்.

Watch Also: மைக்செட் மணிமாறன் - அரசியல் காமெடி வீடியோ

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...