Home /News /entertainment /

Sivakarthikeyan: 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

Sivakarthikeyan: 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டான் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியானது. படம் சுமாராக ஓடியது. இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஏ.ஆர் ரஹ்மான் ஆல்பத்தில் பாடி, நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை!

    அதோடு சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி