Home /News /entertainment /

காதலர் தினத்தை குறி வைக்கும் சிவகார்த்திகேயனின் டான்

காதலர் தினத்தை குறி வைக்கும் சிவகார்த்திகேயனின் டான்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

டான் படம் ரொமான்டிக் காமெடியாக தயாராகியுள்ளது. சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவராக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படத்தை 2022 காதலர் தினத்தையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் வெளியான டாக்டர் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தமிழ்நாடு, வெளிநாடு என எங்கும் படம் வசூலை குவித்தது. அவரது அடுத்தப் படம் டான். சிபி சக்ரவர்த்தி என்ற அறிமுக இயக்குனரின் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளன. ப்ரியங்கா அருள் மோகன் நாயகி. முக்கியமான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா. அனிருத் இசை.

டான் படம் ரொமான்டிக் காமெடியாக தயாராகியுள்ளது. சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவராக நடித்துள்ளதாக தகவல். இந்தப் படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு 2022 பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஒருவாரம் முன்பு நவம்பர் 4-ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது. ஒரே வாரத்தில் அந்தப் படத்தை மாற்றிவிட்டு டான் படத்தை திரையிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல் நவம்பர் 4-ம் தேதி, தெலுங்கில் சிரஞ்சீவி, ராம் சரண் நடித்துள்ள ஆச்சார்யா படமும் வெளியாக உள்ளது. அதனால், டான் தெலுங்குப் பதிப்புக்கும் பாதிப்பு.

இதையெல்லாம் கூட்டிக் கழித்து, நவம்பர் 18-ம் தேதி படத்தை வெளியிடலாம் என்ற தீர்மானத்துக்கு வந்திருப்பதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 பிப்ரவரி 11 அல்லது 18-ம் தேதியில் டான் கண்டிப்பாக திரைக்கு வந்துவிடும் என்பதே இன்றைய நிலவரம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி