Sivakarthikeyan: சென்னையில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தை 2021 பிப்ரவரியில் கோவையில் பூஜையுடன் தொடங்கினர். கொரோனா ஊரடங்கால் நின்று போன படப்பிடிப்பு மறுபடி சென்னையில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

  • Share this:
    சிவகார்த்திகேயன், சூரி நடிக்கும் காமெடித் திரைப்படம் டான். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

    சிவகார்த்திகேயனின் எனர்ஜி ஏரியா காமெடி. வருத்தப்படாத வாலிபர் சங்கமும், எதிர்நீச்சலும் தான் அவரை ஸ்டாராக்கியது. இரண்டுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படங்கள். ஹீரோவான பிறகு வேலைக்காரன், சீமராஜா என்று வேறு திசையில் பயணித்து வெற்றியின் அளவை அவராகவே குறைத்துக் கொண்டார். டானில் மறுபடியும் தனது காமெடி ட்ராக்குக்கு திரும்புகிறார். இதுவொரு முழுமையான நகைச்சுவை திரைப்படம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டானில் சிவகார்த்திகேயனும், சூரியும் கல்லூரி மாணவர்களாக வருகிறார்கள். கேட்கும் போதே புன்னகை வருகிறதல்லவா? நாயகி ப்ரியங்கா அருள் மோகன். இவர்களுடன் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி படத்தை இயக்குகிறார். லைகா தயாரிக்கிறது. இணை தயாரிப்பு சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்.

    இந்தப் படத்தை 2021 பிப்ரவரியில் கோவையில் பூஜையுடன் தொடங்கினர். கொரோனா ஊரடங்கால் நின்று போன படப்பிடிப்பு மறுபடி சென்னையில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: