• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாஸாக நிற்கும் சிவகார்த்திகேயன் - வெளியானது டான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மாஸாக நிற்கும் சிவகார்த்திகேயன் - வெளியானது டான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிவகார்த்திகேயன் டான்

சிவகார்த்திகேயன் டான்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

  • Share this:
    கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாததால் மக்களுக்கு திரையரங்கங்களுக்கு வராமல் இருந்தன. அந்தநிலையில், வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. ஓடிடியில் வெளியாகவிருந்த படத்தை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தியேட்டரில் வெளியிட்டு வெற்றி பெற்றது டாக்டர் படக்குழு. சிவகார்த்திகேயனுக்கு முதல் 100 கோடி ரூபாய் வசூல் திரைப்படமாகவும் அமைந்தது. அதனால், அவருடைய அடுத்தபடமான டானுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

    டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். லைகா புரொடக்ஷன் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இணை தயாரிப்பு சிவகார்த்திகயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ். ரொமான்டிக் காமெடிப் படமாக டான் தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவராக வருவதாக கூறப்படுகிறது.


    டானில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். கூடவே எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி அகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசை. இந்தப் படத்தில் குக்வித் கோமாளி புகழ் சிவாங்கியும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: