• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் 'டான்'.. அடாது மழையிலும் விடாது டப்பிங்..

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் 'டான்'.. அடாது மழையிலும் விடாது டப்பிங்..

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Don Movie : டான் படத்தின் டப்பிங்கை முடித்த சிவகார்த்திக்கேயன்..

  • Share this:
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கிவரும் டான் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.

    டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். லைகா புரொடக்ஷன் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இணை தயாரிப்பு சிவகார்த்திகயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ். ரொமான்டிக் காமெடிப் படமாக டான் தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவராக வருவதாக கூறப்படுகிறது.

    டானில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். கூடவே எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி அகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசை. இன்று மாலை படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்

    also read : அடி, உதை.. கவர்ச்சி நடிகையின் கணவர் கைது..

    சென்னையில் கடும் மழை பெய்துவந்த நிலையில் சிவகார்த்திகேயன் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசியுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அடாது மழையிலும் விடாது டப்பிங். டான் டப்பிங்கை முடித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    டான், டாக்டர் படங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் அயலான். அது சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம். சிஜி வேலைகள் ஏராளம் உள்ளன. அதற்கேற்ப பணமும் உழைப்பும் தேவைப்படுகிறது. அதனால், அயலானை முந்திக் கொண்டு அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட டான் வெளியாக உள்ளது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிடும் திட்டம் லைகாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: