Home /News /entertainment /

DON First Single | அனிருத் குரலில் சிவகார்த்திகேயனின் டான் முதல் சிங்கிள் வெளியீடு!

DON First Single | அனிருத் குரலில் சிவகார்த்திகேயனின் டான் முதல் சிங்கிள் வெளியீடு!

டான்

டான்

சிவகார்த்திகேயன் டான் படத்தில் பள்ளி மாணவனாகவும், பொறியியல் கல்லூரி மாணவனாகவும் இரு வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.

    சிவகார்த்திகேயன் தனது டார்க் காமெடி த்ரில்லர் படமான 'டாக்டர்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, தனது வரவிருக்கும் 'டான்' படத்தின் வேலைகளில் பிஸியானார்.

    படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பையும் டப்பிங்கையும் முன்பே முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். முன்னதாக, படத்தின் வண்ணமயமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டான் படத்தின் முதல் சிங்கிள் டிராக்கை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

    Also Read : விஜய் சேதுபதியும் வில்லங்கமும்.. ஜல்லிக்கட்டு டூ பெங்களூரு விமான நிலையம் வரை

    டான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், ட்விட்டரில் படத்தின் முதல் சிங்கிளின் ப்ரோமோ வீடியோவைப் பகிர்ந்தது. இந்த கிளிப்பில் சிவகார்த்திகேயனின் அற்புதமான ஒற்றை ஷாட் நடனத்தைக் கொண்டிருந்தது.

    டங்காமாரி ஊதாரி மற்றும் ஆளுமா டோலுமா புகழ் ரோகேஷ் எழுதிய "ஜலபுலஜங்கு" என்ற முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. காமெடி என்டர்டெய்னரான இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து, டான் படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தவிர இதில் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.



    சிவகார்த்திகேயன் டான் படத்தில் பள்ளி மாணவனாகவும், பொறியியல் கல்லூரி மாணவனாகவும் இரு வேறு தோற்றங்களில் நடிக்கிறார். இதை அட்லியின் முன்னாள் உதவியாளர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், 'குக்கு வித் கோமாளி' சிவவாங்கி, ஆர்.ஜே. விஜய் மற்றும் 'பிக் பாஸ் 5' புகழ் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோரும் இதில் நடிக்கிறார்கள்.

    Also Read : 2021-ல் உலக அளவில் அதிகம் வசூலித்த முதல் 10 படங்கள்!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி