Home /News /entertainment /

ரிலீஸ் குழப்பத்தில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்

ரிலீஸ் குழப்பத்தில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்

சிவகார்த்திகேயன் டான்

சிவகார்த்திகேயன் டான்

ராஜமௌலி படத்துடன் போட்டியாக டான்  படத்தை களமிறக்க முடியாது என்பதால் வேறொரு வெளியீட்டு தேதியை முடிவு செய்ய பல வாரங்களாக முயற்சி செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்வதில் தயாரிப்பாளரிடையே குழப்பம் நிலவி வருகிறது.

டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் டான்.  அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பிரியங்கா மோகன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். முக்கியமாக எஸ் ஜே சூர்யா பிரதானமான  வேடம் ஒன்றில் நடித்துள்ளார். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

லைகாவும், சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
டான் திரைப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா தொற்று அதிகரித்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஜனவரியில் வெளியாக வேண்டிய திரைப்படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்ததால், டான் படத்தின் பிப்ரவரி திட்டமும் கைவிடப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்சிகளுக்காக நிஜமாகவே குடித்தாரா ஜீவா? வீடியோ உள்ளே!

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட மார்ச் 25-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தனர். அதே நாளில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்  திரைப்படமும் மார்ச் 25 வெளியாகும் என்று அறிவித்தனர். இது தயாரிப்பாளரான லைகாவுக்கு பெருத்த அதிர்ச்சியாக அமைந்தது. காரணம், ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அவர்கள் தான் வாங்கியுள்ளனர். அவர்களிடம் கலந்து பேசாமலே மார்ச் 25-ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்தனர். அதுவும் அவர்களின் டான் திரைப்படம் அதே நாளில் வெளியாகும் என்று அறிவித்து ஓரிரு மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளிவந்தது. ராஜமௌலி படத்துடன் போட்டியாக டான்  படத்தை களமிறக்க முடியாது என்பதால் வேறொரு வெளியீட்டு தேதியை முடிவு செய்ய பல வாரங்களாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை அப்படி ஒரு பாதுகாப்பான வெளியீட்டு தேதியை அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை.

நான் திமிர் பிடித்தவள் தான்... விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

மே 12-ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என்பது அவர்களுடைய திட்டம். ஆனால் மே 6-ஆம் தேதி அருண் விஜய்யின் யானை திரைப்படம் வெளியாகிறது. இதனால் 12-ஆம் தேதி அவர்கள் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் வெளியீட்டு தேதியை முடிவு செய்வார்கள் என தெரிகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி