Home /News /entertainment /

அடுத்தடுத்து 100 கோடிகளை வசூலித்த சிவகார்த்திகேயன்!

அடுத்தடுத்து 100 கோடிகளை வசூலித்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

'டாக்டர்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் 100 கோடி வசூல் செய்த இரண்டாவது படமாக 'டான்' இடம்பெற்றுள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது.

    சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் மே 13 அன்று வெளியாகி, முதல் நாளிலேயே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 'டான்' திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்ததை உறுதி செய்யும் வகையில் படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைப் பகிர்ந்து கொண்டதோடு, இந்த வெற்றியை தனது அப்பாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில், 'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, தனது முதல் படம் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்ததில், படத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற அனைவருக்கும் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.





    பீஸ்ட் பூஜா ஹெக்டேவா இது? நடிக்க வர்றதுக்கு முன்னாடி இருந்த லுக்!

    'டாக்டர்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் 100 கோடி வசூல் செய்த இரண்டாவது படமாக 'டான்' இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்த படங்களின் மூலம் மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தந்தை- மகன் பிணைப்பை மையமாகக் கொண்ட கல்லூரி படமான டானில், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி