Doctor: 4 மொழிகளில் ஓடிடி தளத்தில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்டர்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படத்தை வெளியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

  • Share this:
    நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் 4 மொழிகளில் டாக்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

    தமிழில் 50 கோடிகளுக்கு மேல் பிசினஸ் உள்ள நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அவரது திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு நிச்சய லாபத்தை தருபவை. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பல முன்னணி நடிகர்களின் படங்களைப் போல சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் திரைப்படத்தையும் நேரடியாக ஓடிடியில் வெளியிட முன்வந்தனர். டிஸ்னி + ஹாட் ஸ்டார் படத்துக்கு பெருந்தொகை தர முன்வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டாக்டர் படத்தின் ஓடிடி உரிமையுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் கேட்டது. ஆனால், டாக்டரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி ஏற்கனவே வாங்கியிருந்தது. அவர்கள் டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை தர மறுத்தனர். இதனால், டாக்டர் படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப் போனது.

    கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து, விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கான சகஜநிலை திரும்பியதை அடுத்து, டாக்டர் ஓடிடிக்குப் பதில் திரையரங்கில் வெளியாகும் என்றனர். அது வதந்தி. டிஸ்னி + ஹாட் ஸ்டார் டாக்டரை நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படத்தை வெளியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    டாக்டரில் ப்ரியங்கா அருள் மோகன், வினய் ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: