ரசிகர்களுக்காக இந்த முடிவு - திரையரங்குகளில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டாக்டர்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

 • Share this:
  சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டாக்டர். இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் வினய், யோகி பாபு உள்ளிட்டவர்களும் நடிதுள்ளனர். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

  அதனையடுத்து டாக்டர் படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக டாக்டர் படம் வெளியாவது தள்ளிப்போனது. அதனையடுத்து, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் டாக்டர் படத்தை நேரடியாக திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டபோது, சன் டிவி-யில் அதன் சேட்டிலைட் உரிமம் இருந்தது பிரச்னையானது.

  இந்நிலையில் டாக்டர் திரைப்படம் செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவதாகவும், அதைத் தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதனால், டாக்டர் படம் எந்த வடிவில் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தநிலையில், டாக்டர் திரையரங்குகளில் வெளியாகும் என்பது கே.ஜி.ஆர் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கே.ஜி.ஆர் நிறுவன ட்விட்டர் பதிவில், ‘எல்லா யூகங்களையும் ஒதுக்கிவையுங்கள். சத்தமாக சிரிப்பதற்கு தயாராகுங்கள். அக்டோபர் மாதம் டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும். இந்த முடிவு ரசிகர்களுக்காகவும் அன்பான திரையரங்கு உரிமையாளர்களுக்காகவும் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: