• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Doctor: சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ரிலீஸ் பிளானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Doctor: சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ரிலீஸ் பிளானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சிவகார்த்திகேயன் டாக்டர்

சிவகார்த்திகேயன் டாக்டர்

டாக்டர் திரைப்படம் செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவதாகவும், அதைத் தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாக வைப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    கடைசியாக ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது ’டாக்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இதில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் இதனை தயாரித்துள்ளது.

    அதோடு டாக்டர் படத்தில் வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, இளவராசு, மிலிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    sivakarthikeyan, sivakarthikeyan doctor, doctor release, doctor release date, சிவகார்த்திகேயன், டாக்டர் ரிலீஸ், நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் படங்கள், doctor release on ott, doctor release on netflix, doctor on netflix, doctor on sun tv, sivakarthikeyan doctor on sun tv, சிவகார்த்திகேயன் டாக்டர் நெட்ஃப்ளிக்ஸ், டாக்டர் சன் டிவி, சன் டிவி-யில் டாக்டர் திரைப்படம்
    சிவகார்த்திகேயன் - பிரியா மோகன்


    இந்த படத்தின் மூலம் பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ஆறாவது படமான இதன் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    மெடிக்கல் த்ரில்லர் என்று கூறப்படும் டாக்டர் படத்தை முதலில் மார்ச் 26-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தொடர்ந்து தொற்றுநோய் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதையடுத்து டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் டாக்டர் படத்தை நேரடியாக திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டபோது, சன் டிவி-யில் அதன் சேட்டிலைட் உரிமம் இருந்தது பிரச்னையானது.

    இந்நிலையில் டாக்டர் திரைப்படம் செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவதாகவும், அதைத் தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: