Doctor: தேர்தலை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தேதி மாற்றம்

Doctor: தேர்தலை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தேதி மாற்றம்

டாக்டர் பட ஸ்டில்

இந்தப் படம் மார்ச் 26-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

  • Share this:
    சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தனது நீண்டகால நண்பரான நெல்சன் திலிப்குமருடன் 'டாக்டர்' படத்தில் இணைந்துள்ளார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.



    கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.ப்ரொடக்‌ஷன்ஸ் இந்த டாக்டர் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 26-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதன் வெளியீடு தள்ளிப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடப்பதால், டாக்டர் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாகவும், அதன் பிறகு எப்போது ரிலீஸ் செய்யலாம் என்பதற்கான ஆலோசனை நடந்து வருவதாகவும் இது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் போஸ்டர்களுக்கும், பாடல்களுக்கும் கிடைத்த வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்திருப்பதாகவும், அதே ஆதரவை டாக்டர் படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் அளிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: