சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் பற்றிய அப்டேட்

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் பற்றிய அப்டேட்
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’
  • Share this:
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹீரோ. இந்தப் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

டாக்டர் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தவுடன் மீதமுள்ள காட்சிகளையும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு மாஸ்டர், பொங்கலுக்கு அண்ணாத்த ஆகிய படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியிருப்பதால் டாக்டர் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.


மேலும் படிக்க: ஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்








First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading