Sivakarthikeyan: தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ்?

Sivakarthikeyan: தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ்?

டாக்டர் பட போஸ்டர்

டாக்டர் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கும் விவாதங்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  • Share this:
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் தனது நீண்டகால நண்பரான நெல்சன் திலிப்குமருடன் தொழில் ரீதியாக 'டாக்டர்' படத்தில் இணைந்துள்ளார். இந்த படம் மார்ச் 26-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Bharathi Kannamma: கண்ணம்மாவை மேடைக்கு அழைத்த பாரதி! உண்மை தெரிய வருமா?

இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மக்கள் எதிர்வரும் நாட்களில் தேர்தல் குறித்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால் டாக்டர் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கும் விவாதங்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் ரசிகர்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் தன்மை சிவகார்த்திகேயன் படங்களுக்கு உண்டு என்பதால் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே டாக்டர் ரிலீஸ் குறித்த புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: