• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்கில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் - தேதி அறிவிப்பு

திரையரங்கில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் - தேதி அறிவிப்பு

டாக்டர் படம்

டாக்டர் படம்

டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார்.

  • Share this:
    சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் படம் திரையரங்கில் வெளியாகிறது. அதன் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

    கொரோனா இரண்டாம் அலை இல்லாமல் இருந்திருந்தால் டாக்டர் எப்போதோ திரைக்கு வந்திருக்கும். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், தயாரிப்பு தரப்பு டாக்டரை ஓடிடியில் வெளியிடுவது என்று முடிவு செய்தது. இதற்கு ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலதரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாட்டில் நல்ல மார்க்கெட் உள்ளது. டாக்டர் சிறப்பான தியேட்டர் மெட்டீரியல். அதனை ஓடிடிக்கு தராதீர்கள் என திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கேட்டுக்கு கொண்டனர்.

    இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை எதிர்பார்த்ததைவிட வேகமாக கட்டுக்குள் வந்து ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட டாக்டர் தயாரிப்பாளர் தனது மனதை மாற்றிக் கொண்டார். படத்தை திரையரங்கில் வெளியிடுவது என முடிவு செய்தார். தற்போது படம் அக்டோபர் 9 திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    அக்டோபர் 9 ஆம் தேதிக்கு மேல் ஆயுதபூஜை விடுமுறைகள் வருகின்றன. அதனை குறி வைத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே அரண்மனை 3 அக்டோபர் 14 வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    sivakarthikeyan, sivakarthikeyan doctor, doctor release, doctor release date, சிவகார்த்திகேயன், டாக்டர் ரிலீஸ், நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் படங்கள், doctor movie release date, sivakarthikeyan doctor movie, சிவகார்த்திகேயன் டாக்டர் படம் ரிலீஸ்
    டாக்டர் ரிலீஸ்


    டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். இவர் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். டாக்டரில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்க, வினய், மிலிந்த் சோமன் ஆகியோர் வில்லன்களாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: