Home /News /entertainment /

‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஹேப்பி..

‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஹேப்பி..

டாக்டர் பட போஸ்டர்

டாக்டர் பட போஸ்டர்

தீபாவளியை முன்னிட்டு ‘டாக்டர்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. அனிருத் இசையில் ‘செல்லம்மா’, ‘நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் படிக்க: Eeswaran Official Teaser | கடவுளை சிரிக்கவைக்க சிம்பு சொல்லும் ஐடியா.. கலக்கலான ஈஸ்வரன் டீசர் ரிலீஸ்..

இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு இன்று காலை 11 மணி மற்றும் மாலை 3 மணிக்கு ‘டாக்டர்’ திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். அவர் சொன்னபடியே இன்று காலை 11 மணிக்கு புதிய போஸ்டர் உடன் 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைப்படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. புதிய போஸ்டரில் ‘டாக்டர்’ திரைப்படத்தில் தொகுப்பாளினி அர்ச்சனாவும் இடம்பெற்றுள்ளார்.

அடுத்ததாக 3 மணிக்கு வெளியாக இருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் குறித்த தகவலை அறியவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை தீபாவளியன்று திக்கு முக்காட வைத்துள்ளது ‘டாக்டர்’ டீம்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Doctor, Sivakarthikeyan

அடுத்த செய்தி