#YoutubeTrending | டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. வித்தியாசமாக அறிவித்த படக்குழு..

டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.

  • Share this:
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹீரோ. இந்தப் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

டாக்டர் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் செல்லம்மா என்ற பாடல் 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக 2 நிமிட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.




அதில், அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகிய மூவரும் நகைச்சுவையாக உரையாடுகின்றனர். இந்த வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading