சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’படத்தில் இன்னொரு ஹீரோ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’படத்தில் இன்னொரு ஹீரோ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிவகார்த்திகேயன்
  • Share this:
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிகர் வினய் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை. குடும்பக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை அடுத்து இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ளது.


இந்தப் படத்தைத் தயாரித்த கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘டாக்டர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் வினய் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும் படிக்க: தனுஷ் - அனிருத் எல்லாரையும் இழுத்து விட்டு... ’சுச்சி லீக்ஸ்’ மாதிரி யூடியூப் சேனல் - சுசித்ரா அதிரடி
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...