• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழக திரையரங்கு வசூலில் சாதனை படைத்த டாக்டர்

தமிழக திரையரங்கு வசூலில் சாதனை படைத்த டாக்டர்

டாக்டர் படம்

டாக்டர் படம்

சிவகார்த்திகேயன் படங்களில் தமிழக திரையரங்கு வசூலில் முதலில் 70 கோடிகளை வசூலித்த படம் என்ற பெருமை டாக்டருக்கு கிடைத்துள்ளது.

  • Share this:
    சிவகார்த்திகேயன் நடித்தப் படங்களில் டாக்டர் திரைப்படம் திரையரங்க வசூலில் சாதனைப் படைத்துள்ளது.

    சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது. பத்தோடு பதினொன்றாக இருந்த அவரை வருத்தப்படாத வாலிபர் சங்கமும், எதிர்நீச்சலும் ஹீரோவாக மாற்றின. இந்தப் படங்கள் 30 கோடிகளுக்கு மேல் வசூலித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தன. ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டுப் பிள்ளை படங்கள் 50 கோடிகளைத்தாண்டி வசூலித்தன. நாம் சொல்வது தமிழக திரையரங்க வசூல்.

    அக்டோபர் 9-ம் தேதி வெளியான டாக்டர் திரைப்படம், வெளியான நாள் முதல் வசூலை குவித்து வருகிறது. உலக அளவில் 100 கோடியை கடந்த முதல் சிவகார்த்திகேயன் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. இந்நிலையில் மேலும் ஒரு சாதனையை இந்தப் படம் எட்டியுள்ளது.

    சிவகார்த்திகேயன் படங்களில் தமிழக திரையரங்கு வசூலில் முதலில் 70 கோடிகளை வசூலித்த படம் என்ற பெருமை டாக்டருக்கு கிடைத்துள்ளது. இது யாருக்கும் எளிதில் அமையாத சாதனை. இதன் மூலம் ரஜினி, விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

    டாக்டர் படத்தின் தெலுங்குப் பதிப்பு ஆந்திரா, தெலுங்கானாவில் போட்ட பணத்தை எடுத்திருக்கிறது. விநியோகஸ்தர், திரையரங்குகள் சிறிய லாபத்தையும் பார்த்துள்ளன. அதே நேரம் கேரளாவில் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. வெளிநாடுகளைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயன் படங்களில் இதுவே டாப் கலெக்ஷன்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: