• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 25 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!

25 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!

டாக்டர் படம்

டாக்டர் படம்

இதன் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் தொலைக்காட்சி நாளை தீபாவளி ஸ்பெஷலாக மாலை 6.30 மணிக்கு இப்படத்தை ஒளிபரப்புகிறது.

  • Share this:
    சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் டாக்டர். பீஸ்ட் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வினய், பிரியங்கா மோகன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றால் தல்ளிப்போன இப்படம் ஓடிடி-யில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

    பின்னர் நேரடியாக திரையரங்குகளிலேயே வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் பெரிய நடிகரின் திரைப்படம் என்பதால், ஏகபோக எதிர்பார்ப்பு இருந்தது. அதை கொஞ்சமும் ஏமாற்றாமல் காட்சிக்கு காட்சி நகைச்சுவையை வைத்ததோடு, குடும்பங்கள் கொண்டாடும் விதமாக திரைக்கதை சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருந்தது.

    அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் திரையரங்கில் வெளியான டாக்டர் 25 நாட்களை கடந்துள்ளது. இதன் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் தொலைக்காட்சி நாளை தீபாவளி ஸ்பெஷலாக மாலை 6.30 மணிக்கு இப்படத்தை ஒளிபரப்புகிறது.

    இதற்கிடையே சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: