கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டில் கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, நேற்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதுகளை வழங்கினார்.
நடிகர்கள், நடிகைகள், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
Sivaangi: கலைமாமணி விருதால் சிவாங்கி வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்!
விருதைப் பெற்ற அவர், தனது தாய்க்கு சமர்ப்பித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், ”சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு அந்தப் பதிவில், முதல்வரிடம் கலைமாமணி விருதைப் பெற்ற புகைப்படம், அந்த விருதை தனது தாயிடம் கொடுத்து காலில் விழுந்து ஆசி வாங்கிய படம் ஆகியவற்றையும் இணைத்துள்ளார். கலைமாமணி விருது வாங்கிய சிவகார்த்திகேயனுக்கு, ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்