கொரோனாவின் தீவிரத்தை உணராமல் இருக்கிறார்கள் - சிவகார்த்திகேயன் வீடியோ

கொரோனாவின் தீவிரத்தை உணராமல் இருக்கிறார்கள் - சிவகார்த்திகேயன் வீடியோ
சிவகார்த்திகேயன்
  • Share this:
கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்க தமிழக அரசு வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்தமுயற்சிக்கு திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் சல்யூட். அவர்கள் அனைவருக்கும் நாம் எல்லோரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.


வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற அந்த ஒன்றே ஒன்றுதான். அவசரம் என்றால் மட்டும் வெளியில் வாருங்கள். இன்னும் கொரோனா பற்றிய தீவிரத்தை உணராமல் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தான் இந்த வீடியோ வெளியிடுகிறேன்.

வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்தாலே கொரோனாவிலிருந்து பாதுகாத்து அனைத்தையும் முறியடிக்க முடியும். நான் நம்புவது ஒன்றே ஒன்றுதான் உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’” இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த யோகி பாபுFirst published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading