ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் கதை!? சேலத்து பையனாகும் சிவகார்த்திகேயன்.. பரவும் தகவல்!

திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் கதை!? சேலத்து பையனாகும் சிவகார்த்திகேயன்.. பரவும் தகவல்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சமீபத்தில் வெளியான டான் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்தும் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் படங்களாகவே திரையரங்கில் வெளியாகிறது. மேலும் குடும்பங்கள், இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் திகழ்கிறார்.

    சமீபத்தில் வெளியான டான் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பிரின்ஸ் திரைப்படம் வருகிற 21-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

    இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான நட்ராஜின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Also read... 'சூப்பர்.. எக்ஸலண்ட்..' 'தனி ஒருவன்' இயக்குனரை பாராட்டித் தள்ளிய ரஜினி.! தெலுங்கால் கிடைத்த பெருமை!

    சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் நட்ராஜ். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sivakarthikeyan