மரங்களை விட்டு நீங்கும் பறவைகள் - விவேக் மறைவிற்கு சிவகார்த்திகேயனின் உருக்கமான பதிவு

நடிகர் விவேக் உருவத்தை மரம் போல் சித்தரித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

  நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு செலுத்தி வருகின்றனர். இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் உருவத்தை மரம் போல் சித்தரித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த மரத்திலிருந்து பறவைகள் பறந்து செல்வது போன்றும் பதிவிட்டுள்ளார்.  நாங்கள் மிகவும் அதிர்ச்சியாகவும், சோகத்திலும் உள்ளோம். சினிமாவில் உங்களுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. உங்களை போன்ற சிறந்த கலைஞரிடம் கற்றுக்கொள்வதை தவறிவிட்டேன். உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்றுள்ளார்.

  இந்நிலையில் நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்ய தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியது. தமிழக அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
  Published by:Vijay R
  First published: