சின்னத்திரையில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் ஆனதில் தொடங்கியது சிவகார்த்திகேயனின் பயணம். 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அதுமுதல் இவரின் சின்ன சின்ன குறும்புகளும் சுளுக்கென சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் மனம் கொத்தி பறவையாய் தமிழக திரைரசிகர்களை கொத்தி சென்றது.
தன் இயல்பான நடிப்பாலும், எதார்த்த பேச்சினாலும் மக்கள் மனதில் விரைவாக இடம்பிடித்தார் சிவகார்த்திகேயன். ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் இந்த மனம் கொத்தி நாயகன். திரை ரசிகர்களின் தளபதி விஜய் ஒரு மேடையில் ‘குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன்’ என சொன்னது வைரல் ஆனது. தனுஷோடு 3 திரைப்படத்தில் ஆரம்பித்த நட்பு சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் எதிர் நீச்சல் போட ஆயுத்தமாக்கியது.
தமிழக இளைஞர்களின் கனவு கன்னிகள் இந்த கதாநாயகனின் நாயகிகள் ஆனார்கள். நயன்தாரா முதல் ஹன்சிகா வரை சிவகார்த்திகேயனின் நாயகிகள் ஆனார்கள். சாமானிய மனிதனின் கனவொன்று சரித்திரம் ஆகியது. 'மான் கராத்தே' பீட்டரும், 'காக்கிச்சட்டை' மதிமாறனும் ரஜினி முருகனின் ரஜினி முருகனும் ரசிகர்களிடம் கூடு விட்டு கூடு பாய்ந்தனர். சிவ கார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தமிழக பட்டிதொட்டியெங்கும் கிளை பரப்பி ஊதா கலர் ரிப்பன் பெண்களை யார் அப்பன் என கேட்க வைத்தது.
கண் இமைக்கும் நேரத்தில் கதாநாயகர்களில் முன்னணி வந்து தயாரிப்பாளர்களின் மோஸ்ட் வாண்டேட் ஹீரோ ஆனதோடு குழந்தைகளின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். 'ரெமோ' திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்து குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். பெண் ரசிகர்களின் நம்ம வீட்டு பிள்ளை ஆன சிவகார்த்திகேயன் ஆண் ரசிகர்களுக்கும் பிடித்த 'டான்' ஆகிப் போனார்.
'டாக்டர்' திரைப்படத்தில் தன் வழக்கமான டைமிங் காமடிகளை தவிர்த்து நடிப்பில் மெருகெறிய சிவகார்த்திகேயனை 'மாவீரன்' சிவகார்த்திகேயனாக பார்க்க காத்துக்கொண்டிருக்கிறது அவரது ரசிகர் படை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sivakarthikeyan