Home /News /entertainment /

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரிலீஸ் எப்போது? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரிலீஸ் எப்போது? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

அயலான் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வேற லெவல் சகோ என்ற பாடல் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஏஆர் ரகுமான் பாடியுள்ளார்.

அயலான் ரிலீஸ் தேதி குறித்து வெளிவந்துள்ள புதிய தகவலால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சைன்ஸ் – ஃபிக்ஷன் ஜேனரில் அயலான் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

அயலான் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரியிலேயே முடிந்த நிலையில், அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்டநாட்களாக இந்தப் படம் நிலுவையில் உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

இதையும் படிங்க - சிம்புவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சீரியல் நடிகை - சோஷியல் மீடியாவில் வைரலாகும் போஸ்ட்!

இந்நிலையில் புதிய தகவலாக அயலான் படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறை நாட்களையொட்டி, திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க -  விக்ரமின் ‘மகான்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது படக்குழு…

அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அவருடன் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானு ப்ரியா, பால சரவணன் உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் அயலான் படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இயக்குனர் ரவிக்குமார் இதற்கு முன்பாக இன்று நேற்று நாளை படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றதால் அயலான் மிகப்பெரும் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்களும், படக்குழுவினரும் உள்ளார்கள்.



அயலான் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வேற லெவல் சகோ என்ற பாடல் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஏஆர் ரகுமான் பாடியுள்ளார்.



சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளிவந்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெற்றி பெற்றுள்ளதால், அயலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை தவிர்த்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
Published by:Musthak
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி