முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்துள்ள 'கொட்டுக்காளி' டீசர்

Video : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்துள்ள 'கொட்டுக்காளி' டீசர்

சூரி - அன்னா பென்

சூரி - அன்னா பென்

இதனால் படத்திலும் பின்னணி இசை இல்லாமல் அந்த சூழலின் சத்தமே இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வினோத் ராஜ் அடுத்ததாக சூரி நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சூரியுடன் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பாக வெளியிடுகிறார்.

இதனையடுத்து சூரி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக சிவகார்த்திகேயனுக்கு அளித்த பதிலில், நெஞ்சார்ந்த நன்றிகள் தம்பி. உங்களுடன் பயணிப்பது என்றும் இனிமை... அதுவும் இத்தகைய ஒரு புது களத்தில் பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் இசையமைப்பாளர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் படத்தின் டீசரும் பின்னணி இசை இல்லாமலே வெளியாகியிருக்கிறது.

இதனால் படத்திலும் பின்னணி இசை இல்லாமல் அந்த சூழலின் சத்தமே இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குநர் கௌதம் மேனன் தனது நடுநிசி நாய்கள் படத்தில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள நிலையில் இந்தப் படமும் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்றுத்தரக்கூடும். அதற்கேற்ப படத்தின் டீசரும் அமைந்துள்ளது. இதனையடுத்து கதையின் நாயகனாக சூரி ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Actor Soori, Sivakarthikeyan