Sivakarthikeyan: கவனம் ஈர்க்கும் சிவகார்த்திகேயன் திருமண வீடியோ!

குடும்பத்துடன் சிவகார்த்திகேயன்

மனைவியின் உதவி இல்லாமல் தன்னால் தனது கெரியரில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது என்றும் சிவகார்த்திகேயன் பல நேர்க்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு வந்து இன்று முன்னணி நடிகராகியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவை பெற்றுள்ள அவரது படங்கள் அனைத்தும், பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு குறைந்தபட்ச உத்தரவாதத்தை அளிக்கின்றன.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை ஆர்த்தியை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் சிவா. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும் உள்ளார். தனது மனைவி பொறுப்பாக வீட்டை கவனித்துக் கொள்வதோடு, நிதி நிர்வாகத்தை பார்த்துக் கொள்வதாகவும், அவரது உதவி இல்லாமல் தன்னால் தனது கெரியரில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது என்றும் சிவகார்த்திகேயன் பல நேர்க்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் 2011 மே-16 அன்று நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர், அதே ஆண்டில் ஆகஸ்ட் 27-ம் தேதி அவர்களது திருமணம் நடந்தது. அக்டோபர் 22, 2013 அன்று ஆராதனா பிறந்தது குறிப்பிடத்தக்கது.

    தவிர சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ 4 மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதோடு ‘அயலான்’ மற்றும் ‘டான்’ ஆகியப் படங்களும் அவரது கைவசம் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: