ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரின்ஸ்- ரசிகர்கள் வைத்த செல்லப்பெயரையே சூடிக்கொண்ட சிவகார்த்திகேயன்

பிரின்ஸ்- ரசிகர்கள் வைத்த செல்லப்பெயரையே சூடிக்கொண்ட சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படத்திற்கு Prince என தலைப்பு வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டான் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் படத்தின் பெயரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது திரைப்படத்திற்கு பிரின்ஸ் என்ற தலைப்பை தேர்வு செய்து, முதல் பார்வையுடன் அறிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா என்ற நடிகை நாயகியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்த திரைப்படம் ரொமான்டிக் காமெடி வகையில் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்தியன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

அதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. பிரின்ஸ் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளர் எஸ். தமன் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனை அவருடைய ரசிகர்கள் என்று பிரின்ஸ் என்று அழைத்து வந்தனர். தற்போது அதையே தலைப்பாக வைத்திருக்கின்றன.

Published by:Karthick S
First published:

Tags: Sivakarthikeyan