• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெங்களூருவில் இருக்கிறேன்.. அவரைச் சந்திக்க முடியவில்லை- புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன் உருக்கம்

பெங்களூருவில் இருக்கிறேன்.. அவரைச் சந்திக்க முடியவில்லை- புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன் உருக்கம்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதிக்குச் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.

  • Share this:
    கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி திடீரென்று அவரது உயிர் பிரிந்தது. 46 வயதே ஆகும் புனித்தின் மரணம் மொத்த திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    புனித் ராஜ்குமாரின் மகள் வருகை தாமதமானதால் ஞாயிறுக்கிழமை அவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் ஞாயிறு காலை கண்டீரவா ஸ்டேடியத்தில் தொடங்கியது. யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் அசோக், சோமண்ணா, முனிரத்னா உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர். பின்னர் புனித்தின் சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், மனைவிஅஷ்வினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கண்டீரவா ஸ்டுடியோவில் புனித் ராஜ்குமார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, புனித் ராஜ்குமார் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், ‘புனித்தின் மறைவை இன்னமும் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு புனித் ராஜ்குமாருடன் பேசியிருந்தேன். மிகச் சிறந்த மனிதர். சிறந்த ஆன்மா. அவருடைய மறைவு திரையுலகு முழுவதுக்கும் பெரும் இழப்பு. அவருக்கு இறப்பு கிடையாது. அவருடைய நல்ல விஷயங்கள் நினைவு கூறப்படும். இனிவரக்கூடியவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரையில் மட்டுமல்ல, திரைக்கு பிந்தைய வாழ்க்கைக்கும் அவர் முன்னுதாரணமாக திகழ்வார். பெங்களூரு வந்தால் என்னை சந்திக்கவேண்டும் என்று கூறினார். நான் இப்போது பெங்களூருவில் இருக்கிறேன். அவரைப் பார்க்க முடியவில்லை. அவருடைய மறைவின் அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியவில்லை’என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: