மற்ற நடிகர்களுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் உள்ள வித்தியாசம், அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும், அதன் வெற்றி சதவீதமும். பொங்கல் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் பிற நடிகர்கள் அனைவரையும்விட அதிக பொங்கல் படங்கள் தந்தவர் அவராகவே இருப்பார். அதிக படங்கள் வெளியாகாத குடியரசு தினத்தை எடுத்துக் கொண்டாலும் 13 படங்களுடன் அவரே முன்னிலையில் உள்ளார்.
25-01-1956 - நானே ராஜா
26-01-1966 - மோட்டார் சுந்தரம் பிள்ளை
26-01-1972 - ராஜா
26-01-1974 - சிவகாமியின் செல்வன்
26-01-1976 - உனக்காக நான்
26-01-1977 - தீபம்
26-01-1978 - அந்தமான் காதலி
26-01-1980 - ரிஷிமூலம்
26-01-1982 - ஹிட்லர் உமாநாத்
26-01-1985 - பந்தம்
26-01-1986 - மருமகள்
26-01-1987 - குடும்பம் ஒரு கோவில்
27-01-1979 - திரிசூலம்
இந்தப் படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். பல வெள்ளி விழா கண்டவை. 27-01-1979 வெளியான திரிசூலம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் அதுவரை வெளியான அனைத்துத் தமிழ்ப் படங்களின் வசூலை முறியடித்து, இன்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனையை படைத்தது.
1978 இல் வி.சோமசேகர் இயக்கத்தில் ராஜ்குமார் 3 வேடங்களில் நடித்த சங்கர் குரு கன்னடப் படம் வெளியாகி, புதிய வசூல் சாதனை படைத்தது. அதற்கு முன் சித்தலிங்கையா இயக்கத்தில் ராஜ்குமார் நடித்த பங்காரத மனுஷ்ய படம் 3 கோடி வசூலித்து, 3 கோடியை எட்டிய முதல் படம் என்ற சாதனையை படைத்திருந்தது. சங்கர் குரு 3.26 கோடிகள் வசூலித்து, முந்தையப் படத்தின் சாதனையை முறியடித்தது. இந்தப் படத்தை கே.விஜயன் இயக்கத்தில் தமிழில் திரிசூலமாக ரீமேக் செய்தனர். சிவாஜி கணேசன் ராஜ்குமார் நடித்த மூன்று வேடங்களை தமிழில் ஏற்று நடித்தார். அவரது 200 வது படமாக இது வெளியானது.
படம் திரைக்கு வந்த முதல்நாள் தொடங்கி சாதனைகள் படைக்க ஆரம்பித்தது. சென்னையில் 900 அரங்கு நிறைந்த காட்சிகள், மதுரையில் 400 க்கும் மேல் அரங்கு நிறைந்த காட்சிகள் என பட்டையை கிளப்பியது. 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 175 காட்சிகளுக்கு குறையாமல் அரங்கு நிறைந்தது இன்னொரு சாதனை. சென்னை உள்பட 11 திரையரங்குகளில் 175 நாள்களை கடந்து வெள்ளி விழா கண்டது. அதுவரை எந்தத் திரைப்படமும் 11 திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்டதில்லை. அந்த திரையரங்குகள்...
சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வாp
மதுரை - சிந்தாமணி
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
தஞ்சை - அருள்
சேலம் - ஓரியண்டல்
வேலூர் - அப்சரா
திருவண்ணாமலை - ஸ்ரீபாலசுப்பிரமணியம்
பாண்டிச்சேரி - ஜெயராமன்
இதில் வேலூரில் திரிசூலத்துக்கு முன்பு எந்தப் படமும் 175 நாள்கள் ஓடியதில்லை. அதேபோல் தமிழகத்தில் திரிசூலம் 3 கோடிகளைத் தாண்டி, 3 கோடிகளை வசூலித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் பெற்றது.
அதிகம் பேர் பார்த்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலில் இன்றும் முதல் 5 இடத்திற்குள் திரிசூலம் உள்ளது. இதுபோன்ற இன்டஸ்ட்ரி ஹிட் பிறகு அரிதாகவே சம்பவித்திருக்கிறது. 27-01-1979 வெளியான படம் இன்று 44 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.
Also read... Exclusive: ரசிகர்களை கொண்டாட வைக்கும் பஞ்ச் டயலாக்... விஜய் 67 ப்ரமோவில் என்னென்ன இருக்கின்றன?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.