ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்துக்காக கமலிடம் ரஜினிக்கு சிபாரிசு செய்த சிவாஜி!

பொன்னியின் செல்வன் படத்துக்காக கமலிடம் ரஜினிக்கு சிபாரிசு செய்த சிவாஜி!

சிவாஜி - கமல் - ரஜினி

சிவாஜி - கமல் - ரஜினி

பொன்னியின் செல்வன் உரிமை என்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சதும், அந்தப் படத்துல வந்தியத்தேவன் கேரக்டர அவனுக்கு (ரஜினிக்கு) கொடுன்னு சிவாஜி ஐயா என் கிட்ட சொன்னாரு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் கதை படமாக்கப்பட்டால், அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க சொல்லி கமலிடம் தெரிவித்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 

  பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, ஜெயலலிதாவால் தான் பொன்னியின் செல்வன் கதையைப் படித்தேன் என்ற சுவாரஸ்ய சம்பவத்தைக் கூறினார். ”1980-களில் ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா குமுதம் பத்திரிக்கையில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் இப்போது இருப்பவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற வாசகரின் கேள்விக்கு, ரஜினிகாந்த் என்று பதிலளித்திருந்தார். அதை கேட்டவுடன் குஷி ஆகிவிட்டேன். உடனே கொண்டு வாடா அந்த புத்தகத்தை என படிக்கத் தொடங்கினேன். படிக்க படிக்க ஆர்வமாக சென்று கொண்டே இருந்தது. கல்கி உயிருடன் இருந்திருந்தால் அவரது இல்லத்திற்கு சென்று காலில் விழுந்திருப்பேன்” என்று ரஜினி பேசிய போது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

  ரஜினியை பொன்னியின் செல்வன் கதையை படிக்கத் தூண்டிய ஜெயலலிதா!

  ரஜினி சொன்ன இந்த விஷயத்தைக் கேட்ட கமல், “நீங்க சொன்னதால நானும் இப்போ ஒண்ணு சொல்றேன். பொன்னியின் செல்வன் உரிமை என்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சதும், அந்தப் படத்துல வந்தியத்தேவன் கேரக்டர அவனுக்கு (ரஜினிக்கு) கொடுன்னு சிவாஜி ஐயா என் கிட்ட சொன்னாரு. இந்த உரையாடல் பெரிய வீட்ல நடந்ததால வெளில யாருக்கும் தெரியாது. பிரபுவுக்கு தெரியும்” என எதிரில் அமர்ந்திருந்த பிரபுவை பார்த்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த ரஜினிகாந்த், “நெஜமாவா” என்றார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Ponniyin selvan, Rajinikanth