ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘கதை சொல்ல ஆரம்பித்த என்னை சிவாஜி சார் விரட்டி விட்டார்’ – சுவாரசிய சம்பவத்தை சொல்லும் இயக்குனர் பி.வாசு

‘கதை சொல்ல ஆரம்பித்த என்னை சிவாஜி சார் விரட்டி விட்டார்’ – சுவாரசிய சம்பவத்தை சொல்லும் இயக்குனர் பி.வாசு

சிவாஜி கணேசன் - பி.வாசு

சிவாஜி கணேசன் - பி.வாசு

பெரிய தப்பு செய்து விட்டோமோ என்று உணர்ந்தேன். மறுநாள் எனக்கு சிவாஜி சார் வீட்டிலிருந்து போன் வந்தது. – பி.வாசு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கதை சொல்ல ஆரம்பித்த என்னை சிவாஜி கணேசன் விரட்டி விட்டார் என்று இயக்குனர் பி.வாசு தனக்கு நேர்ந்த சம்பவத்தை சுவைபட விவரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

  நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு, என்னுடைய தந்தை நல்ல பழக்கம். நான் யார் என்பதை தெரிந்ததும் அவர் என் தந்தை குறித்து பாராட்டிப் பேசினார்.

  ‘மேக்கப் கலைஞரான உங்க அப்பா எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுக்கிறார்’ என்று சிலாகித்து சிவாஜி சார் சொன்னார். அப்போதிலிருந்தே எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு.

  ஒருமுறை தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் போன் செய்து ‘சிவாஜி சாரை வைத்து படம் பண்ண வேண்டும். சரித்திரம் என்ற பெயரில் படத்தை எடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதன் பின்னர் சிவாஜி சாரிடம் சென்று கதை சொல்லலாம் என்று இருந்தேன். அப்போது அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டாயா என்று என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றேன். ‘ஏண்டா சாப்பிட்டு வந்து இருக்கலாம் அல்லவா. என்னால் தனியாக சாப்பிட முடியாது. நீ சாப்பிடாமல் நான் சாப்பிட்டால் அது நன்றாக இருக்காது’ என்றார்.

  சிம் கார்டு வாங்குவதில் வாக்குவாதம்! நடிகையை கடைக்குள் வைத்து லாக் செய்த ஊழியர்கள்.!

  ‘நான் சாப்பிடல சார். பரவாயில்லை’ என்றேன். ‘சரி உனக்காக சீக்கிரம் சாப்பிட்டு வருகிறேன்’ என்று கூறி, விரைவாக உணவை முடித்தார்.

  சாப்பிட்டு வந்து வந்து டிவியை போட்டு, கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டே கதை சொல்லு என்றார். நான் ஒரு ஐந்து நிமிடம் கதை சொன்னேன். அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்தி விட்டேன். அப்போது எதற்காக நிறுத்தினாய் என்று சார் கேட்டார். நான் நீங்கள் டிவி ஆப் செய்ய வேண்டும். கான்சன்ட்ரேஷன் சரியாக இருக்காது என்றேன்.

  இயக்குனர் பதிவிட்ட பர்சனல் புகைப்படம்.. இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என பதறிய நடிகை!

  இதைக் கேட்டதும் டென்ஷனில் பேசிய சிவாஜி சார், கான்சன்ட்ரேஷன் பத்தி என்னிடமே சொல்கிறாயா? என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று கடுமையாக திட்டத் தொடங்கினார். ‘என் நினைப்பு நடிப்பு, படத்தில் என்னுடைய கேரக்டரைப் பற்றி மட்டும்தான் இருக்கும்’ என்று ஆவேசத்துடன் கூறி, ‘இடத்தை காலி செய். கிளம்பு’ என்று என்னை விரட்டி விட்டார்.

  கதையை கேட்கவில்லை. அவருக்கு மொத்தமே ஐந்து நிமிடம் தான் கதை சொன்னேன். பிறகு நான் திரும்பி வந்து விட்டேன். பெரிய தப்பு செய்து விட்டோமோ என்று உணர்ந்தேன். மறுநாள் எனக்கு சிவாஜி சார் வீட்டிலிருந்து போன் வந்தது.

  அப்போது அங்கு இருந்த சிவாஜி சாரின் மகன்கள் ராமும், பிரபுவும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நான் அங்கு வருவதற்கு முன்பாக நேற்று ராம் மற்றும் பிரபுவிடம் என்னை பற்றி பேசியுள்ளார். ‘வாசுவுக்கு தைரியம் அதிகம். பின்னாளில் பெரிய ஆளாக வருவான். நம்முடைய சிவாஜி புரோடக்சனுக்காக அவனிடம் கதை கேளுங்க’ என்று மகன்களிடம் சிவாஜி சார் கூறியிருந்தார். இதை அறிந்த பின்னர்தான் எனக்கு நிம்மதி வந்தது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Sivaji ganesan