Home /News /entertainment /

சொந்தச் செலவில் திருவள்ளுவர் சிலை அமைத்த சிவாஜி கணேசன்

சொந்தச் செலவில் திருவள்ளுவர் சிலை அமைத்த சிவாஜி கணேசன்

சிவாஜி

சிவாஜி

சிவாஜி இறந்தபின், அதே கடற்கரை சாலையில் அவருக்கு சிலை வைத்தார் கருணாநிதி. இப்போது அந்தச் சிலை அங்கில்லை. உரிய மரியாதையுடன் அந்தச் சிலை மீண்டும் வைக்கப்பட வேண்டும் என்பதே சிவாஜி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
எம்ஜிஆரை வள்ளல் என்று கொண்டாடுகிற அதேநேரம் சிவாஜியை கஞ்சத்தனமானவர் என்று விமர்சிக்கிற போக்கு முன்பு இருந்தது. இப்போதும்கூட அந்த மனப்பதிவு மாறவில்லை. உண்மையில் சிவாஜி அளவுக்கு சமூகத்துக்கு அள்ளிக் கொடுத்த நடிகர்கள் ஒருசிலரே.

கோவில்களுக்கு யானைகள் நன்கொடையாக அளிதது, அவற்றை பரமரிக்க பல ஏக்கர் நிலத்தை தானமாகத் தந்தது, இந்தியா எல்லைப் போர்களில் பங்கெடுத்த நேரங்களில் லட்சங்களில் பணத்தை அள்ளித் தந்தது, அறுபதுகளில் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரத்தில் பெரும் தொகையை நன்கொடையாக அளித்தது, சத்துணவு திட்டத்துக்கு நன்கொடை அளித்ததுடன் பணம் வசூலித்து தந்தது என சிவாஜியின் பங்களிப்புகள் நிறைய.

1967 இல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, சென்னை கடற்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவுவது என முடிவான போது, அதற்கான அனைத்துச் செலவுகளையும் சிவாஜி கணேசன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் சிலைக்கு அவரே மாடலாகவும் இருந்தார். இதுவொரு வரலாற்று நிகழ்வு. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாது. அந்தச் சிலை இன்றளவும் சென்னை கடற்கரையில் உள்ளது.



இந்தச் சிலை 1968 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இரண்டாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சிலையின் பீடத்தில் அதனை திறந்து வைத்தவர் உள்ளிட்டவர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவாஜி கணேசனின் பெயர் சிலையின் பின்புற பீடத்தில் உள்ளது. சிலைக்கு செலவு செய்து, அதற்கு மாடலாகவும் இருந்த சிவாஜி கணேசனின் பெயரை முன்புறம் வைக்காததில் சிவாஜி ரசிகர்களுக்கு இன்றளவும் வருத்தம் உள்ளது.

Also read... Soori: நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை

சிவாஜி இறந்தபின், அதே கடற்கரை சாலையில் அவருக்கு சிலை வைத்தார் கருணாநிதி. இப்போது அந்தச் சிலை அங்கில்லை. உரிய மரியாதையுடன் அந்தச் சிலை மீண்டும் வைக்கப்பட வேண்டும் என்பதே சிவாஜி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Sivaji ganesan, Entertainment

அடுத்த செய்தி