Home /News /entertainment /

சிவாஜியின் தியாகம் பட வசூல் சர்ச்சை - போஸ்டரிலேயே பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்

சிவாஜியின் தியாகம் பட வசூல் சர்ச்சை - போஸ்டரிலேயே பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்

தியாகம்

தியாகம்

சிவாஜி படங்கள் 100 நாள்களுக்கு மேல் ஓடி லாபம் சம்பாதித்தாலும் எம்ஜிஆர் படங்களே வருட இறுதியில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை தட்டிச் செல்லும். முதல்முறையாக 1978-ல் தியாகம் எம்ஜிஆர் படங்களை தாண்டி வசூலித்தது.

தங்கள் தலைவரின் படம் எத்தனை கோடி வசூலித்தது என்று அறிகிற ஆர்வம் எப்போதுமே ரசிகர்களுக்கு உண்டு. இதில் தான் ரசிகர்களுக்குள் அடிதடியே நடக்கும். விஜய்யின் சர்கார் இத்தனை கோடி வசூலித்தது என்றால், எங்க ஆள் மட்டும் தொக்கா, வலிமை எத்தனை கோடி தெரியுமா என்று கையை முறுக்குகிறார்கள் அஜித் ரசிகர்கள். கமலின் விக்ரம் படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் 112 கோடிகள் விற்கப்பட்டதாக வந்த நியூஸின் கீழ், தலைவரோட 2.0 படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் மட்டுமே 110 கோடி தெரியுமா என்று ரஜினி ரசிகர்கள் நெட்டி முறிக்கிறார்கள். இந்த வசூல் சண்டை இப்போதில்லை, 44 வருடங்களுக்கு முன்பும் இருந்திருக்கிறது.

சரியாக 44 வருடங்களுக்கு முன் 1978 மார்ச் 4 ஆம் தேதி சிவாஜியின் தியாகம் படம் வெளியானது. இந்தியில் வெற்றி பெற்ற அமானுஷ் (1975) திரைப்படத்தின் உரிமையை வாங்கி இந்தப் படத்தை எடுத்தனர். தியாகத்தை தயாரித்தவர் சிவாஜி படங்களின் ஆஸ்தான தயாரிப்பாளர் கே.பாலாஜி. எந்தக் கதை ஓடும், எந்தக் கதை கவுக்கும் என்பதை அறிந்தவர். இந்திப் பட உரிமையை சும்மா வாங்கியிருப்பாரா? அந்தக்கதையை தமிழில் எடுத்தால் ஓடும் என்ற உறுதியான நம்பிக்கையில்தான் தியாகம் என்ற பெயரில் அதனை ரீமேக் செய்தார். கே.விஜயன் இயக்கத்தில் படமும் வெளியானது. பாடல்கள் இளையராஜா - கண்ணதாசன் காம்போ.

படம் வெளியானதும் சிவாஜியின் திரையுலக எதிரிகள் படத்துக்கு வசூல் இல்லை, படம் பிளாப் என்று கிளப்பிவிட்டார்கள். பாலாஜிக்கோ கடும் கோபம். இன்று போல் இணையம் இருந்திருந்தால் உடனடியாக பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால், அன்றைக்கு அப்படியான வசதி எதுவும் இல்லையே. ஆனால், ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். படம் பம்பர் ஹிட்டானது. முக்கியமான காரணம் படத்தின் பாடல்கள். நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி... என்ற கண்ணதாசனின் தத்துவப் பாடல் ஆண்களை கவர்ந்தது என்றால், வசந்தகால கோலங்கள் பாடலுக்கு பெண்களின் உலகம் அடிமையானது. தேன்மல்லி பூவே... ஒலிக்காத இடங்கள் இல்லை. அப்போதைய இளைஞர்களின் விருப்பப் பாடலாக மாறியது, டிஎம்ஸ் பாடிய, உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா உன் விளக்கை... பாடல்.

படம் வெளியான போது எதிரிகள் பரப்பிய  விமர்சனத்துக்கு பதிலடி கொடுப்பது போல் படம் ஓடியது. விமர்சித்தவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்த பாலாஜி, படத்தின் வசூலை பத்திரிகையில் படவிளம்பரத்துடன் தந்தார். படத்தின் 100-வது நாள் விளம்பரங்கள் இப்படி வந்தன.

Sivaji Ganesan Thyagam Collection Controversy Producer Balaji bold reply in Poster, thyagam movie, thyagam movie sivaji, sivaji thyagam movie, thyagam movie songs, thyagam movie download, thyagam movie cast, thyagam movie collection, thiyagam collection, சிவாஜி கணேசன், தியாகம் திரைப்படம், சிவாஜி கணேசன் தியாகம் கலெக்‌ஷன்

நன்றி! நன்றி! நன்றி!
எங்களை வாழ்விக்க இருக்கும்
தங்க ரசிகர்களுக்கு இதயமார்ந்த நன்றி!!!
விஷமத்தனமான விமர்சனம் செய்த
விகடர்களை மண்டையில் சவுக்கால் அடித்தீர்கள்
வசூலில் பொரும் சாதனை! வெற்றிக்கொடி நாட்டும் 100-வது நாள்
எனக் குறிப்பிட்டு திரையரங்கு வாரியாக எத்தனை லட்சங்கள் படம் வசூலித்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின்-மாரி செல்வராஜ் கூட்டணியில் மாமன்னன்!

Sivaji Ganesan Thyagam Collection Controversy Producer Balaji bold reply in Poster, thyagam movie, thyagam movie sivaji, sivaji thyagam movie, thyagam movie songs, thyagam movie download, thyagam movie cast, thyagam movie collection, thiyagam collection, சிவாஜி கணேசன், தியாகம் திரைப்படம், சிவாஜி கணேசன் தியாகம் கலெக்‌ஷன்

தியாகம் திரைப்படம் சென்னையில் சாந்தி, கிரௌவுன், புவனேஸ்வரி, குரேம்பேட்டை வெற்றி, செங்கல்பட்டு கணபதி உள்பட பல திரையரங்குகளில் 300 நாட்கள் ஓடி, அந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்தது. சிவாஜி படங்கள் 100 நாள்களுக்கு மேல் ஓடி லாபம் சம்பாதித்தாலும் எம்ஜிஆர் படங்களே வருட இறுதியில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை தட்டிச் செல்லும். முதல்முறையாக 1978-ல் தியாகம் எம்ஜிஆர் படங்களை தாண்டி வசூலித்தது.

விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு மன்சூர் அலிகான் அட்டகாச நடனம்!

படம் ஓடலை, வசூல் இல்லை என்ற மட்டையடி விமர்சனங்கள் அப்போதும் இருந்திருக்கிறது. இதோ இத்தனை லட்சம் எங்கள் படம் வசூலித்திருக்கிறது என்று விளம்பரம் செய்கிற வெளிப்படைத்தன்மை தான் இப்போது இல்லாமல் போய்விட்டது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Sivaji ganesan

அடுத்த செய்தி