டி.ஆர்.ராஜகுமாரிக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கியவர் அஞ்சலிதேவி. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உச்ச நடிகையாக அவர் திகழ்ந்தார். முதலில் அவரது தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றன. அஞ்சலிதேவிக்காக படங்கள் பார்த்த தமிழர்கள் அப்போது அதிகமிருந்தனர்.
நாற்பதுகளின் பிற்பகுதியில் அவர் மகாத்மா உதங்கர், மங்கையர்க்கரசி, மாயாவதி போன்ற நேரடித் தமிழ்ப் படங்களில் நடித்தார். சினிமாவில் பிரபலமாகும் முன்பே அஞ்சலிதேவி இசையமைப்பாளரும், நடன இயக்குநருமான ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஞ்சலி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி படங்களும் தயாரித்தார்.
பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், என்டி.ராமராவ், நாகேஸ்வரராவ் என அன்றைய முன்னணி தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் அவர் நடித்தார். 1973 இல் அஞ்சலிதேவி தனது அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் பக்த துக்காராம் படத்தை தெலுங்கில் தயாரித்து நடித்தார். இதில் அஞ்சலிதேவி நாயகியாகவும், அக்னியேனி நாகேஸ்வரராவ் நாயகனாகவும் நடித்தனர். இவர் நடிகர் நாகார்ஜுனின் தந்தை. மதுசூதனன் ராவ் படத்தை இயக்க, அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ் படத்திற்கு இசையமைத்தார்.
பக்த துக்காராம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துக்காராமைப் பற்றிய கதை. அவர் பாண்டுரங்கனின் சிறந்த பக்தர். இந்தப் படத்தில் வீரசிவாஜியாக சிவாஜி கணேசன் நடித்தார். இதற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கான செலவையும் அவரே ஏற்றுக் கொண்டதாகவும் கூறுவர்.
சிவாஜி கணேசன் அறிமுகமானது பராசக்தி படத்தில் என்றாலும் அப்படம் வரும் முன்பே பூங்கொதை படத்தில் நடிக்க அஞ்சலிதேவி பிக்சர்ஸ் சார்பில் சிவாஜிக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. பூங்கோதை திரைப்படம் தமிழில் பூங்கோதை என்றும், தெலுங்கில் பரதேசி என்றும் ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரானதால் வெளியாக தாமதமானது. இதில் நாகேஸ்வரராவும், அஞ்சலிதேவியும் பிரதான வேடங்களில் நடிக்க, ஆனந்த் என்ற வேடத்தில் சிவாஜி நடித்தார். எல்.வி.பிரசாத் படத்தை இயக்கினார். இதற்கும் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவே இசையமைத்தார்.
Also read... சம்பளம் வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம்
எழுபதுகளின் முற்பகுதியில் அஞ்சலி பிக்சர்ஸ் பொருளாதார நெருக்கடியில் இருக்கையில் சிவாஜியிடம் பக்த துக்காராம் படத்தில் வீரசிவாஜியாக நடிக்க அணுக, பராசக்தி வரும் முன்பே பூங்கோதை படத்துக்கு முன்பணம் தந்தவர் என்ற நன்றிக்கடனில் பக்த துக்காராமில் பணம் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்ததுடன் படப்பிடிப்பு செலவையும் சிவாஜி ஏற்றுக் கொண்டார். படம் 100 நாள்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது.
இதேபோல் நட்புக்காக, நன்றிக்கடனுக்காக, கருணைக்காக பல படங்களில் சம்பளம் வாங்காமல் நடிகர் திலகம் நடித்து பலருக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.