Home /News /entertainment /

சிவாஜி 2 உருவாகுமா? ஏ.வி.எம் நிறுவன தயாரிப்பாளர் அருணா குகன் சொன்ன பதில்!

சிவாஜி 2 உருவாகுமா? ஏ.வி.எம் நிறுவன தயாரிப்பாளர் அருணா குகன் சொன்ன பதில்!

சிவாஜி 2

சிவாஜி 2

சிவாஜி-2 திரைப்படத்திற்கு கதை அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் நடக்கலாம் என ஏ.வி.எம் நிறுவனத்தை சேர்ந்த அருணா குகன் பேட்டி. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சிவாஜி-2  திரைப்படத்திற்கு கதை அமைந்தால் தயாரிப்போம் என ஏ.வி.எம் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் அருணா குகன் தெரிவித்துள்ளார்.

ஏ.வி.எம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளது. அந்த நிறுவனம் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரியஸை தயாரித்துள்ளது.  ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள அந்த இணைய தொடர் வரும் 19ஆம் தேதி Sony Liv ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.  இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தொடரின் குழுவினர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர்.

செல்ல மகளுடன் நடிகர் சதீஷ்.. லைக்ஸ் அள்ளும் தந்தை மகளின் அட்ராசிட்டி!

அதில் பேசிய தயாரிப்பாளர் அருணா குகன் இடம் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு மற்றும் சிவாஜி-2 உருவாக வாய்ப்புள்ளதா என்ற  கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அருணா குகன், சிவாஜி-2 திரைப்படத்திற்கு முதலில் கதை அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் நடக்கலாம் என தெரிவித்தார்.

விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறாரா த்ரிஷா? வைரலாகும் புதிய தகவல்

அதே போல் பெரிய நடிகர்களின் படங்கள் தயாரிக்க ஏ.வி.எம் நிறுவனம் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு, நாங்கள் எதற்கும் ஓப்பனாக இருக்கிறோம். சில கணக்கிடுகள் உள்ளன,  நாங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளியில் தெரியவில்லை. ஏ.வி.எம் நிறுவனம் எதற்கும் தயாராக உள்ளது என தெரிவித்தார். இதன் மூலம் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் மீண்டும் கோலிவுட்டில் களமிறங்க தயாராகிவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Director Shankar, Kollywood, Rajinikanth, Sivaji, Tamil Cinema

அடுத்த செய்தி