Home /News /entertainment /

அருண் விஜய்யின் சினம் படத்தில் பாடிய சிவாங்கி!

அருண் விஜய்யின் சினம் படத்தில் பாடிய சிவாங்கி!

சிவாங்கி

சிவாங்கி

குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் இது.

அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சினம் படத்திற்காக ஒரு பாடலை சிவாங்கி பாடியுள்ளார்.

சிவாங்கி அடிப்படையில் ஒரு பாடகி. சூப்பர் சிங்கர் மூலம் பாடகியாக பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை கடைக்கோடி கிராமம் வரை கொண்டு சேர்த்தது. இப்போது திரைப்படங்களிலும் இவர் நடிக்க ஆரம்பித்துள்ளார். முக்கியமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் டான் திரைப்படத்தில் சிவாங்கி முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். மார்ச் 25-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படம் தவிர காசேதான் கடவுளடா, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வடிவேலு நாயகனாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுராஜ் படத்தை இயக்க லைக்கா தயாரிக்கிறது. சிவாங்கி பாடியுள்ள சினம் படத்தை ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார். சபீர் இசை. அருண் விஜய்யின் தந்தையும் நடிகருமான விஜயகுமாரின் மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் புரோடக்சன் ஹவுஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Sivaangi sings in Arun Vijay Sinam movie, arun vijay movies in tamil, arun vijay thriller movies, arun vijay age, arun vijay family, arun vijay hairstyle, arun vijay wife, arun vijay movies list in tamil, arun vijay father, sivaangi, sivaangi krishnakumar husband, sivaangi krishnakumar age, sivaangi krishnakumar wikipedia, sivaangi ashwin, sivaangi instagram, sivaangi brother instagram, sivaangi brother age, sivaangi photos, சிவாங்கி, அருண் விஜய், அருண் விஜய் சினம், சினம் திரைப்படம், விஜய் டிவி சிவாங்கி, சிவாங்கி பாடல்கள், அருண் விஜய், நடிகர் அருண் விஜய்

இதில் அருண் விஜய் பாரி வெங்கட் என்ற சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் இது. கிரைம் திரில்லர் ஆக இது தயாராகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் பார்டர் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சென்ற வருட இறுதியில் பார்டர் திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால் இன்னும் வெளிவரவில்லை. அதேபோல் சினம் திரைப்படமும் வெளியீட்டுக்கான முயற்சியில் உள்ளது. இவை தவிர ஓ மை டாக் படத்தையும் அருண் விஜய் முடித்துள்ளார். ஹரி இயக்கத்தில் யானை படமும் அவரது நடிப்பில் தயாராகி வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Arun Vijay, Sivangi

அடுத்த செய்தி