ஆபாசப்பட நடிகருடன் நித்தியானந்தா படமா..? யோகிபாபு திரைப்படத்தால் கொதித்தெழுந்த சிவசேனா

ஆபாசப்பட நடிகருடன் நித்தியானந்தா படமா..?  யோகிபாபு திரைப்படத்தால் கொதித்தெழுந்த சிவசேனா
  • Share this:
ஆபாசப் பட நடிகர் ஒருவரின் படத்துடன், நித்யானந்தாவின் படத்தையும் சேர்த்து, மோஷன் போஸ்டர் வெளியிட்ட பப்பி படக்குழுவினர் மீது சிவசேனா அமைப்பு போலீசில் புகார் அளித்துள்ளது.

யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பப்பி எனும் திரைப்படத்தின்  மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவசேனா அமைப்பை சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அதில், அமெரிக்காவில் முழு நீல நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரையும், இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து பப்பி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Watch Also:
First published: August 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்