• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த: கதை சொல்லும்போதே சிவா அழ வைத்து விட்டார்- ரஜினி

அண்ணாத்த: கதை சொல்லும்போதே சிவா அழ வைத்து விட்டார்- ரஜினி

ரஜினிகாந்த் - சிவா

ரஜினிகாந்த் - சிவா

அண்ணாத்த படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,பெண்கள்,குழந்தைகள் என அனைவருக்கும் பிடிக்கும் என்று சிவா சொன்னார். அதேமாதிரி சொல்லி அடித்திருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த தான் நடித்து வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் , படத்தின் இயக்குநர் சிவா ஆகியோர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஹூட் செயலியில் தெரிவித்துள்ளார். அதில்,  கதையை கூறும்போதே சிவா தன்னை அழ வைத்துவிட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் செயலியில் இணைந்துள்ளார். இதன் மூலம் தனது குரலிலேயே  பல்வேறு தகவல்களையும் கூறி வருகிறார். அந்த வகையில், இன்று அவர் வெளியிட்டுள்ள ஹூட்டில், விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து சிவாவை சந்தித்தது குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    அதில், “நாம் சேர்ந்து படம் பண்ணுவோம், எனக்கு கதை தயார் செய்யுங்கள் என்று சிவாவிடம் சொன்னபோது, உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸி என சிவா கூறினார். எனக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸி என இதுவரை என்னிடம் சொன்னது இல்லை.  எப்படி ஈஸி என்று சொல்கிறீர்கள் என்று சிவாவிடமே கேட்டேன்.

    அதற்கு அவர், இரண்டு விசயம் முக்கியம். முதலில் நல்ல கதையில் நீங்கள் இருக்க வேண்டும். தளபதி, முத்து, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா ஆகியவை நல்ல கதைகள்; அதில் நீங்கள் இருந்திங்க.. அடுத்ததா நீங்க கிராமத்து கதை பண்ணி ரொம்ப நாள் ஆகிறது.  இது ரெண்டும் இருந்தாபோதும் சார்னு சொன்னார். அவர் சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது.

    இதையும் படிங்க: விஸ்வாசம் ஒன்னுமே இல்லனு நினைச்சேன், ஆனா...ரஜினி பேச்சு!


    கதை சொல்ல 15 நாட்கள் அவகாசம் கேட்டார், ஆனால், 12வது நாளிலேயே வந்து கதை சொன்னார். கதை சொல்லும்போது தண்ணி வேணும்னு சொன்னார். தண்ணி சாப்பிட்டுகிட்டே கதை சொன்னார். தண்ணி என்றால் சாதாரண தண்ணிதான். வேறு எதையும் நினைக்காதீர்கள். கதை சொல்ல சொல்ல, கிளைமேக்ஸ்ல எனக்கு தெரியாமயே கண்ணீர் வந்துவிட்டது.

    சொன்னதையே படமாக எடுங்கனு சிவாவிடம் கூறினேன். அண்ணாத்த படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,பெண்கள்,குழந்தைகள் என அனைவருக்கும் பிடிக்கும் என்று சிவா சொன்னார். அதேமாதிரி சொல்லி அடித்திருக்கிறார் சிவா.  அண்ணாத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  சிவாவுக்கு நன்றி. அண்ணாத்த என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம்” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    மேலும் படிங்க: ஜெய்பீம்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: