• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தெலுங்குப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடிகளா?

தெலுங்குப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடிகளா?

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் வருண் டாக்டர் என்ற பெயரில் நாளை வெளியாகிறது. அதன் புரமோஷனில் சிவகார்த்திகேயனும், படக்குழுவும் தீவிரமாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயன் அடுத்து நேரடித் தெலுங்குப் படமொன்றில் நடிக்கிறார். இதற்காக அவருக்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல்களை தெலுங்கு மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.

குறுகிய காலத்தில் மாஸ் நடிகர்கள் வரிசையில் இணைந்தவர் சிவகார்த்திகேயன். அவரது படங்களுக்கு நாற்பது கோடிகளுக்கு மேல் திரையரங்கு பிசினஸ் உள்ளது. சேட்டிலைட், டிஜிட்டல் போன்ற பிற உரிமைகள் தனி. நாளை வெளியாகவிருக்கும் அவரது டாக்டர் படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை மட்டும் 25 கோடிகளுக்கு விலைபோயுள்ளது

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் படங்கள் தயாராகி வருகின்றன. அதன் பிறகு தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறார். இது அவரது முதல் நேரடித் தெலுங்குப் படம். ஜதி ரத்னலு சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அனுதீப் இந்தப் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் வந்து வெற்றி பெற்ற நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி படத்தை தயாரித்த நாராயண் தாஸ் நரங் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் படத்தை வெளியிடுவதாகத் திட்டம்.

முன்தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு 25 கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக பிரபல தெலுங்கு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தமிழில் அதைவிட மிகக்குறைவான சம்பளமே பெறுகிறார். தெலுங்கு இன்டஸ்ட்ரி தமிழைவிட பெரிது என்பதாலும், தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் படத்தை வெளியிட இருப்பதாலும் இந்த சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

Also read... லோகேஷ் கனகராஜின் விக்ரம், ஹரியின் யானை படங்களின் புதிய அப்டேட்!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் வருண் டாக்டர் என்ற பெயரில் நாளை வெளியாகிறது. அதன் புரமோஷனில் சிவகார்த்திகேயனும், படக்குழுவும் தீவிரமாக உள்ளது. சிவகார்த்திகேயனின் நேரடித் தெலுங்குப் படத்துக்கு வருண் டாக்டர் ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தெலுங்கு புரமோஷன் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: