Home /News /entertainment /

12 நாட்களில் ரூ. 100 கோடி… வசூல் மழையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’

12 நாட்களில் ரூ. 100 கோடி… வசூல் மழையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’

சிவகார்த்திகேயன் டான்

சிவகார்த்திகேயன் டான்

முதல்படம் என்று சொல்ல முடியாத வகையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிறப்பான முறையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

டான் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12 நாட்களில் இந்தப் படம் ரூ. 100 கோடியை வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவமான லைகா அறிவித்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் டான்.

கடந்த 13-ம்தேதி வெளியான இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் பாதியில் கலகலப்பாக நகரும் கதைக்களம், இரண்டாம் பாதியில் வலுவான எமோஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்ததாக, ரசிகர்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆகியுள்ளது.

இதையும் படிங்க - ஐம்பதுகளின் நயன்தாரா... அஞ்சலிதேவியின் அம்புலிமாமா படம்!

முதல் பாதியில் கடைசி பெஞ்ச் மாணவனான சிவகார்த்திகேயனுக்கும், கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்து பிரின்ஸ்பல் ஆக உயர்ந்து எஸ் ஜே சூர்யாகும் இடையே நடைபெறும் மோதல்கள் ரசிகர்களை சுவாரசியம் அடைய செய்கின்றன.

படத்தின் நீளம் லேசான பின்னடைவு என்றாலும் நேரம் போவது தெரியாமல் அடுத்தடுத்து காட்சிகளை அடுக்கி உள்ள விதம் பலரையும் ரசிக்க செய்துள்ளது.

இதையும் படிங்க - Goundamani: விளிம்பு நிலை மக்களை திரையில் பிரதிபலித்த கவுண்டமணி!

இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை தொடர்ந்து கேலி செய்து வரும் நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் திரைப்படமாகவும் இந்த படம் அமைந்துள்ளது.



இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். முதல்படம் என்று சொல்ல முடியாத வகையில் சிபி சக்கரவர்த்தி சிறப்பான முறையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

டான் திரைப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி அளவுக்கு வசூலை டான் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தகவல் வெளியிட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Lyca, Sivakarthikeyan

அடுத்த செய்தி