OTTயில் சிவகார்த்திகேயனின் டாக்டர்..?- படக்குழு எடுத்த அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன்

மார்ச் மாதம் டாக்டர் வெளியாகும் என விளம்பரங்கள் செய்யப்பட்ட நிலையில் அப்போதும் படம் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றியது.

  • Share this:
சிவகார்த்திகேயன் நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் ஒடிடி தளத்திற்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டே தயாரிப்பு பணிகளை முடித்துவிட்டு டாக்டர் படக்குழு, படத்தின் விளம்பர வேலைகளாக அதன் பாடல்களையும் வித்தியாசமான வகையில் வெளியிட்டது. ஆனால் ஒருவனாக ஊரடங்கு காரணமாக திரைப்படம் வெளியாக வில்லை.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் நடிகர் விஜயுடன் அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதம் டாக்டர் வெளியாகும் என விளம்பரங்கள் செய்யப்பட்ட நிலையில் அப்போதும் படம் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றியது.

Also Read: Pooja Hegde : அழகே நீ எங்கிருக்கிறாய்! நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

ஓராண்டுக்கும் மேலாக படம் வெளியாகாமல் இருப்பதால் தயாரிப்பாளர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து அது தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் குழுவுடன் டாக்டர்களும் ஒப்பந்தம் செய்து விட்டதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

விரைவில் படத்தை ஹாட்ஸ்டார் இல் எதிர்பார்க்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: