Home /News /entertainment /

துல்கர் சல்மானில் காணுன்ன கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

துல்கர் சல்மானில் காணுன்ன கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

சீதா ராமம்

சீதா ராமம்

மிருணால் தாகூர், ராஷ்மிகா மந்தனா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

  • News18
  • Last Updated :
    துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் திரைப்படத்தின் காணுன்ன கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Lie படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi)  இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சீதா ராமம்.  இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான்,  மிருணாளினி தாகூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1965ஆம் ஆண்டு கதை நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது.  அத்துடன் துல்கர் சல்மான் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார்.

    50 கோடி பேர் வாழும் இந்தியாவில் தனக்கென ஒரு உறவு கூட இல்லை என்ற இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சீதா ராமம் என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர்.

    இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளனர்.



    இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 5ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் சீதா ராமம் திரைப்படத்தின் காணுன்ன கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி