சூர்யா குத்தாட்டம் போட்ட சிரிக்கி பாடல் வீடியோ வெளியானது

சூர்யா குத்தாட்டம் போட்ட சிரிக்கி பாடல் வீடியோ வெளியானது
  • News18
  • Last Updated: September 25, 2019, 1:51 PM IST
  • Share this:
காப்பான் படத்தில் இடம்பெற்ற சிரிக்கி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா-மோகன்லால்-ஆர்யா ஆகியோரது நடிப்பில் கடந்த 20-ம் தேதி வெளியான படம் காப்பான். இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. தொடர் தோல்விகளில் சிக்கி வந்த சூர்யாவுக்கு காப்பான் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.

செப்டம்பர் 20-ம் தேதி வெளியான காப்பான் படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் தமிழ்நாட்டில் முதல் 5 நாட்களில் ரூ.27 கோடி வரை வசூல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


இதேபோல் கேரளா, ஐக்கிய அரபு நாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. சூர்யா படம் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வசூலை பெறும். ஆனால் காப்பான் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சிரிக்கி என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. முன்னதாக ரசிகர்களிடம் காப்பான் படத்தில் இருந்த எந்த பாடல் வேண்டும் என்று லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டிருந்தது. இதற்கு 80% பேர் சிரிக்கி பாடல் என்று பதிலளித்திருந்தனர்.



Loading...

Also watch

First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...